சிறப்பு எஸ்.ஐ. வில்சன் மூத்த மகளுக்கு அரசு வேலை: பணி நியமன உத்தரவை வழங்கினார் ஆட்சியர்

கோப்புப் படம் ( வில்சனின் மூத்த மகள் வலதுபுறமிருந்து 4-வதாக நிற்கிறார்)
கோப்புப் படம் ( வில்சனின் மூத்த மகள் வலதுபுறமிருந்து 4-வதாக நிற்கிறார்)
Updated on
1 min read

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. வில்சனின் மூத்த மகளுக்கு அரசுப் பணிக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையில் உள்ள களியாக்கவிளை சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த ஜனவரி 8-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வில்சன் கொலை வழக்கில் தவ்ஃபீக் மற்றும் முகமது ஷமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.ஏற்கெனவே நிவாரண நிதி அளிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், வில்சனின் மூத்த மகளுக்கு அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவு இன்று வழங்கப்பட்டது. அவருக்கு, வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பணி நியமன உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in