

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளின் உள் மாவட் டங்களில் கன மழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் வெப்பச் சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதுவரை மேற்கு மாவட்டங்களில்தான் அதிக மழை பதிவாகியிருந்தது.
தி.மலையில் 11 செ.மீ.
தென் மேற்கு பருவ மழை ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தீவிரமடைந் துள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவண்ணாமலையில் 11 செ.மீ., ராமநாதபுரத்தில் 8 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திருக்கோவி லூர் மற்றும் தருமபுரி மாவட்டம் அரூரில் 7 செ.மீ., வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்கள் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். பிற மாவட் டங்களில் ஆங்காங்கே கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.