அதிமுக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின் வீட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம்: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சனம்

செல்லூர் கே.ராஜூ
செல்லூர் கே.ராஜூ
Updated on
1 min read

எதற்கெடுத்தாலும் அதிமுக அரசைவிமர்சனம் செய்யும் ஸ்டாலின் வீட்டுக்கும், தமிழக அரசு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குகிறது என கூட்டுறவுத் துறைஅமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை பழங்காநத்தத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி இருண்ட காலமாக இருந்தது. பெரும் நிறுவனங்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்குமான ஆட்சியாக அது இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சி. திமுக ஆட்சியில் மின்தடை நிரந்தரமாக இருந்தது. அதிமுக ஆட்சியில் இதுவரை மின்தடை ஏற்பட்டதே இல்லை. மின் மிகை மாநிலமாகச் செயல்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதிமுக அரசை எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அரசு வழங்குகிறது. அவர் தமிழகஅரசின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டு விமர்சனம் செய்கிறார். மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். அவரது முதல்வர் கனவு பகல் கனவாகவே முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in