Published : 28 Feb 2020 08:28 AM
Last Updated : 28 Feb 2020 08:28 AM

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு விசாரணை: சிபிஎஸ்இ அதிகாரிகள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, தேர்வை நடத்திய சிபிஎஸ்இ அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக தமிழக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 மாணவிகள், 9 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் இடைத்தரகர்கள் என 18 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வை தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) நடத்தி வருகிறது.2019-ம் ஆண்டுக்கு முன்பு நீட் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத் தியது. இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் இணைய தள முகவரிக்கு ஒரு இ.மெயில் வந்தது.

இந்தியில் நீட் தேர்வு

அதில், சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டுபடிக்கும் மாணவன் தனுஷ்குமாருக்கு இந்தி தெரியாது, ஆனால் பிஹாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக குறிப்பிடப் பட்டிருந்தது.

அதன்பேரில், மாணவன் தனுஷிடம் மருத்துவக் கல்வி மற்றும், கல்லூரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, அவருக்கு இந்தி தெரியாது என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தனுஷ்,2018-ம் ஆண்டு பிஹார் மாநிலத்தில் இந்தியில் நீட் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தை தேவேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

2018-ல் நடந்த தேர்வு விவரம்

தனுஷுக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மாணவர், இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த இடைத்தரகர் ஆகியோரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 2018-ம் ஆண்டுநீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இஅதிகாரிகளிடம் விசாரணைநடத்துவதற்காக, அவர்களைநேரில் ஆஜராகச் சொல்லி தமிழக சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மேலும், 2018-ம் ஆண்டு தேர்வு எழுதிய தமிழக மாணவர்களின் விவரங்களை வழங்கக்கோரி சிபிஎஸ்இ-க்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x