Published : 28 Feb 2020 07:45 AM
Last Updated : 28 Feb 2020 07:45 AM

தமிழக கோயில்கள் தல வரலாறு குறித்த ஆவணப்படம் தயாரிப்பு: இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு

சென்னை

தமிழகத்தின் முக்கிய கோயில்களின் தல வரலாறு, உள்கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை விரைவில் இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 44,121 கோயில்கள் உள்ளன. இவற்றில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பழனி முருகன் கோயில் உள்ளிட்ட 150 முதுநிலை கோயில்கள் உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் கோயில்களை பற்றி அறிந்து கொள்வதற்காக 150 முதுநிலை கோயில்களுக்கும் தனிதனியாக தல வரலாறு, கோயிலுக்கு அருகாமையில் உள்ள முக்கிய நகரங்கள், போக்குவரத்து வசதி,உள்கட்டமைப்பு வசதி உள்ளிட் டவை அடங்கிய ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆவணப்படங்கள் அனைத்தும் தயாரிக்கும் பணிகள் முடிந்துவிட்டன. இருப்பினும், ஆவணப்படங்களை ஆராய, குழு அமைக்கும் படி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இக்குழுவினர் மூலம் ஆவணப்படங்களில் அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளதா, ஏதாவது தகவல்களை இணைக்க வேண்டுமா என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இதுவரை இக்குழு அமைக்கப்படவில்லை. இக்குழுவின் மூலம் இறுதி செய்யப் பட்டவுடன் ஆவணப்படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x