

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை மீறுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பது ஏற்கெனவே அரசு விதிமுறைகளில் உள்ளது.
இருந்தாலும், அரசு ஊழியர்கள் பலரும் வேலை நேரத்தின் போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதை வலியுறுத்தும் வகையில் மீண்டும் இந்த செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.