

சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் எடப்பாடியார் உள்ளிட்ட நான்கு முக்கிய அமைச்சர்கள் தீர்மானமாக இருக்கிறார்களாம். இதை உளவறிந்து கொண்ட பாஜக தலைமை, ஓபிஎஸ் மூலமாக மீண்டும் அதிமுகவை ரெண்டுபடுத்தும் யோசனையில் இருக்கிறதாம். ஈபிஎஸ், வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் இவர்கள் இல்லாத அதிமுக அணி ஒன்றை ஓபிஎஸ் தலைமையில் உருவாக்குவதுதான் பாஜகவின் லேட்டஸ்ட் திட்டம் என்கிறார்கள். இந்த அணியுடன் பாமக, ரஜினி ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க திட்டமிடுவதாகவும் சொல்கிறார்கள். அதற்கு முன்னோட்டமாக அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என்ற பேச்சும் பாஜக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நகர்வுகள் எல்லாம் தெரிந்துதான் அதிமுக அரசும் மத்திய அரசைச் சங்கடப்படுத்தும் காரியங்களில் மெதுவாக மூக்கை நுழைத்துப் பார்க்கிறதாம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுகூட அதன் ஒரு பகுதிதானாம்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 1, 2020)