

'தமிழக அரசு இயங்கும் நிலை சிறப்பாக இல்லை, வாட்ஸ் அப் தகவல்களைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது' என மதுரை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன் விமர்சித்துள்ளார்.
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, இறுதியாகப் பேசிய திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன், "மதுரை எம்.பி. தமிழக அரசைப் பாராட்டியுள்ளார். தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், இன்று வாட்ஸ் அப்பில் உலா வரும் தகவல்களில் தமிழக அரசு மீதான விமர்சனங்களைப் பார்க்கும்போது அரசு சிறப்பாக செயல்படவில்லை சிரிப்பாக செயல்படுகிறது என்றே தோன்றுகிறது" என்றார்.