

ஜூன் 1-ம் தேதி தொடங்கி 2020 டிசம்பருக்குள் மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணி நிறைவடையும் என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக விமான நிலைய இயக்குநர், விமான நிறுவனத் தலைவர்கள் ஆகியோருடன் நடந்த ஆலோசனை குழு கூட்டம் பற்றி எம்.பி. வெங்கடேசன் விளக்கினார்.
அப்போது அவர், "விமான நிலைய விரிவாக்கப் பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். அதன் விளைவாக கடந்த 7 மாதங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட 916 பேருக்கு மொத்த 56 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி தொடங்கி 2020 டிசம்பருக்குள் மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கப் பணி நிறைவடையும். மார்ச் மாதம் முதல் மதுரை - டெல்லி இடையே தினமும் ஏர் இந்தியா விமானம் இயக்கப்படும்" என்றார்.