

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரும் வரும் மார்ச் 12-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா தேவி வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்காக இன்று நிர்மலா தேவி உள்ளிட்டோர் ஆஜராகினர்.
விசாரணைக்குப் பின்னர், பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் வரும் மார்ச் 12-ல் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.