தனியார் பால் விலையை கட்டுப்படுத்தமுடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தனியார் பால் விலையை கட்டுப்படுத்தமுடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published on

தனியார் பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரி வித்தார்.

இதுகுறித்து அவர் விருது நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டு தனியார் பால் விலை இரு முறை உயர்ந்துள்ளது. தனியார் பால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது. விலைவாசி உயர் வுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த் திக் கொடுக்கின்ற காரணத்தால் தனியார் பால் விலையை உயர்த் துகிறார்கள். ஆனால், ஆவின் பாலைப் பொறுத்தவரை இனி மேல் விலையேற்றம் கிடையாது.

மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியதும் கட்டுமானப் பணி தொடங்கும். வரும் 2021-22-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in