சிறுபான்மையினர் மீதான கருணை பார்வை ஜெயலலிதாவை விட முதல்வர் பழனிசாமிக்கு அதிகம்: செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ: கோப்புப்படம்
அமைச்சர் செல்லூர் ராஜூ: கோப்புப்படம்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறுபான்மையின மக்களுக்கான கருணைப் பார்வையை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி முந்தி விட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் நேற்று (பிப்.25) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்ன வழியில் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தாரோ, அதே அடிப்படையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கருணைப் பார்வை ஜெயலலிதாவைக் காட்டிலும் முதல்வர் பழனிசாமிக்கு அதிகமாக இருக்கிறது.

உலமாக்களுக்கு ஏற்கெனவே ரூ.1,500 உதவித்தொகையை ஜெயலலிதா வழங்கினார். இன்றைக்கு அந்த உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. சிறுபான்மையினரின் பாதுகாப்பு அரணாக முதல்வர் பழனிசாமி இருக்கிறார்" என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in