

தமிழகத்தில் ஹஜ் செல்ல விண்ணப்பித்துள்ள 6,028 பேரின் பயணத்தையும் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இந்த 2020-ம்ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 6,028 பேர் தமிழகஹஜ் கமிட்டியிடம் விண்ணப்பித் துள்ளனர். அதேநேரம் இந்திய ஹஜ் கமிட்டியானது, 7 பச்சிளங் குழந்தைகள் உட்பட 3,736 பேருக்கு மட்டுமே தமிழகத்தில் அனுமதியளித்துள்ளது. மீதமுள் ளவர்கள் தங்களுக்கும் ஹஜ் பயணத்துக்கான அனுமதி கிடைக் கும் என்று நம்பிக்கையுடன் உள் ளனர்.
பயண காலியிடங்கள்
பயணம் ரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதர மாநிலங்களில் ஹஜ் பயணி களுக்கான ஒதுக்கீட்டை அவர்கள் முழுமையாக நிரப்புவதில்லை. எனவே, போதிய அளவிலான ஹஜ் பயண காலியிடங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி யால் பெறப்பட்டுள்ள விண்ணப் பங்கள் அடிப்படையில் 6,028 பேரும் செல்லும் வகையில் பயணத்தை உறுதிசெய்ய மத்திய சிறுபான்மையினர் நல அமைச்ச கத்துக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.