Published : 26 Feb 2020 07:52 AM
Last Updated : 26 Feb 2020 07:52 AM

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 5-வது கூட்டம்: தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் மேகேதாட்டு அணை குறித்த விவாதம் தள்ளிவைப்பு

காவிரி மேலாண்மை ஆணையத் தின் 5-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் கடும் எதிர்ப்பால் கர்நாடகாவின் மேகேதாட்டு அணை தொடர்பான விவாதம் தள்ளிவைக்கப்பட்டது.

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் 5-வது கூட்டம், டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆணையதலைவர் ராஜேந்திரகுமார் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகஅரசு சார்பில் பொதுப்பணித் துறைசெயலர் க.மணிவாசன், காவிரிதொழில்நுட்பக் குழு தலைவர்சுப்பிரமணியன், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் பட்டாபிராமன், திருச்சி மண்டல உதவி செயற் பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

கர்நாடக அரசு கோரிக்கை

இக்கூட்டத்தில், தமிழகத்துக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி வழங்கப்பட வேண்டிய தண்ணீரை வழங்குவது குறித்து பேசப்பட்டது. இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில், நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தை செயல்படுத்து வதற்கான திட்ட அனுமதியை ஆணையத்திடம் கர்நாடக அரசு கோரியிருந்தது.

இதுகுறித்து விவாதிக்கப்படும் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, செய்தியாளர் களிடம் பொதுப்பணித் துறை செயலாளர் கே.மணிவாசன் கூறி யதாவது:

இந்த கூட்டத்தில், மேகேதாட்டு வில் அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கர்நாடகா சார்பில் ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை மேகேதாட்டுவில் அணை கட்டும் பேச்சுக்கே இட மில்லை.

இந்த அணையை கட்டக் கூடாது என்பதுதான் தமிழகத்தின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. இதுதொடர்பாக 2 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

முதல்வர் அறிவுரையின்படி

எனவே முதல்வர் அறிவுரை யின்படி, ஆணையத்தில் கர்நாடகாவின் இந்த திட்டத்துக்கு கடுமை யான ஆட்சேபம் தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலு வையில் இருப்பதையும் எடுத்துச் சொல்லி, இந்த விவகாரத்தை விவாதிக்கக் கூடாது, அனுமதியும் கொடுக்கக்கூடாது என்று தமிழகம் புதுச்சேரி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மேகேதாட்டு விவகாரம் விவாதிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, காவிரி நதிநீர் ஒழுங்குபடுத்தும் குழுவின் கூட்டம் ஆணைய தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை எடுத்துச் சொல்லி, மேகேதாட்டு அணை விவகாரத்தை விவாதிக்கக்கூடாது, அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று தமிழகம் புதுச்சேரி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x