சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் ஜெயலலிதா

சென்னையில் பிரதமர் மோடியை வரவேற்றார் ஜெயலலிதா
Updated on
2 min read

பிரதமரான பிறகு முதல் முறை யாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெய லலிதா உள்ளிட்டோர் வர வேற்றனர்.

முதல்வர் ஜெயலலிதா வீட்டில் அவருக்கு மதிய விருந்து அளிக்கப் பட்டது.

தேசிய கைத்தறி தின அறிவிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடை பெற்றது. அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் கே.ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், டிஜிபி அசோக்குமார், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு, மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரும் மோடியை வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து ஜி.எஸ்.டி. சாலை, அண்ணா சாலை, சர்தார் பட்டேல் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை வழியாக சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கத்துக்கு காலை 11.20 மணிக்கு வந்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

வழிநெடுகிலும் அவருக்கு பாஜக, அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தேசிய கைத்தறி தின விழா முடிந்ததும் பகல் 1.10 மணிக்கு காமராஜர் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கதீட்ரல் சாலை வழியாக போயஸ் கார்டன் புறப்பட்டார். பகல் 1.26 மணிக்கு ஜெயலலிதாவின் இல்லத்துக்கு சென்றார். சுமார் 50 நிமிடங்கள் இருவரும் சந்தித்துப் பேசினர். அங்கு மோடிக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.

போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் 2.16 மணிக்கு புறப்பட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை வழியாக எம்.ஆர்.சி. நகர் வசந்தா அவென்யூவில் உள்ள துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமியின் வீட்டுக்குச் சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தார். சுமார் 10 நிமிடங்கள் அங்கிருந்த அவர், சர்தார் பட்டேல் சாலை, அண்ணா சாலை, ஜி.எஸ்.டி. சாலை வழியாக விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநர் கே.ரோசய்யா, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கு.ஞான தேசிகன், டிஜிபி அசோக்குமார், இல.கணேசன், தமிழிசை சவுந்தர ராஜன், எஸ்.மோகன்ராஜுலு உள் ளிட்டோர் மோடியை வழியனுப்பி வைத்தனர்.

டிவிட்டரில் மகிழ்ச்சி

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் சென்னை. மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக் கப்பட்டது. சென்னையில் இருப் பதற்காக மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன்” என பதிவு செய்திருந்தார். விமான நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழக நூற் றாண்டு அரங்கம் வரை சாலை யின் இரு பக்கமும் தனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதன் ஒரு நிமிட வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ளார்.

விமான நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரும் வழியில் சுவாமி விவேகானந்தர் இல்லம் அருகே வந்ததும் காரின் வேகத்தை குறைக்கச் செய்து பிரதமர் மோடி கை கூப்பி வணங் கினார். இல்லத்தின் வாயிலில் கூடியிருந்த துறவிகளைப் பார்த்து மோடி கையசைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in