வங்கி மேலாளர் பேசுவதாக கூறி நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி; டெல்லி கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு-தொலைபேசியில் தகவல் கேட்டால் தெரிவிக்க வேண்டாம் என போலீஸார் அறிவுரை

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி நூதன முறையில் பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி இளைஞர்கள்.
வங்கி மேலாளர் பேசுவதாக கூறி நூதன முறையில் பண மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி இளைஞர்கள்.
Updated on
2 min read

வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த டெல்லி கும்பலை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

வங்கி வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண்களை சேகரித்துக் கொண்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள், “வங்கி யில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்” என்று கூறி கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றனர்.

பின்னர் போலி கார்டு தயா ரித்து, வாடிக்கையாளர்களின் வங் கிக் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் திருடி வந்தனர். உயர் அதிகாரிகள் முதல் சாதாரண மக்கள் வரை இதுபோன்ற மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடமும் பாதிக்கப்பட்டவர் கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து மோசடி கும்பலைப் பிடிக்க மத்திய குற்றப் பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி, துணை ஆணையர் நாகஜோதி மேற்பார் வையில் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில், வங்கி மேலாளர் போல் பேசி வாடிக்கைகையாளர்களின் வங்கி விவரங்களைப் பெற்று பண மோசடியில் ஈடுபட்டது புதுடில்லியைச் சேர்ந்த தீபக் குமார் (20), அதே மாநிலத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான தேவ் குமார் (20), வில்சன் (25) ஆகிய 3 பேரையும் டெல்லி சென்று மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறும்போது, “கைது செய்யப் பட்டவர்கள் தமிழகம் மட்டும் அல் லாமல் பிஹார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோல் கைவ ரிசை காட்டியுள்ளனர். கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு தலை மறைவாக உள்ள கும்பல் தலை வனைத் தேடி வருகிறோம். கைது செய்யப்பட்ட 3 பேரையும் விரை வில் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். அதில் மேலும் பல தகவல்கள் வெளியாக வாய்ப் புள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

போலீஸார் வழங்கிய ஆலோசனை

தொலைபேசி வழி வங்கி கணக்கு மோசடியாளர்கள் உங் களின் பெயர், விலாசம், உங்களின் டெபிட், கிரெடிட் கார்டு எண் மட்டுமின்றி வங்கி கணக்கு விவரங் களைக்கூட அறிந்து வைத்திருக் கலாம்.

அவர்கள் வங்கியிலிருந்து பேசுவதாக வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கடன் அட்டை தொடர்பான கடன் வரம்பு உயர்த்து தல் அல்லது கடன் புள்ளிகளை உயர்த்தி பரிசு வழங்குதல் அல்லது வேறு வகையான திட்டங்களைப் பற்றி கூறுவர் அல்லது விவரங் களை சரிபார்ப்பதாக தெரிவித்து விவரங்களை பெறுவர்.

பின்னர், கார்டின் ரகசிய விவரங்களான கார்டு நம்பர், சிவிவி நம்பர், காலாவதி தேதி மற்றும் ஓடிபி ஆகியவற்றை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்று அந்த விவரங்களைக் கொண்டு ஆன்லைன் மூலம் மோசடி பரிவர்த்தனைகள் செய்து வாடிக்கையாளர்களுக்கு இழுப்பு ஏற்படுத்துவார்கள்.

வங்கி அதிகாரிகள் போனில் தகவல் கேட்பதில்லை. எனவே, வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி தொலைபேசியில் தகவல் கேட்டால் தெரிவிக்காதீர்கள்.

வங்கிக் கணக்கில் இருந்து வேறொருவரின் கணக்குக்குப் பணம் மாற்ற தொலைபேசி வாயி லாக ஒப்புதல் அளிக்க வேண்டாம். செல்போனுக்கு வாய்ஸ் மெயில், குறுந்தகவல் வந்தால் அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டாம். மோசடி ஆசாமிகள் பற்றி தகவல் தெரிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in