Last Updated : 25 Feb, 2020 04:55 PM

 

Published : 25 Feb 2020 04:55 PM
Last Updated : 25 Feb 2020 04:55 PM

நெல்லையில் கோடைக்கு முன்னரே 99 குளங்கள் வறண்டன; 6 அணைகளில் 60% நீர் இருப்பு: வேளாண் துறை புள்ளிவிவரம் வெளியீடு

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 6 அணைகளிலும் தற்போது 60 சதவீதம் நீர் இருப்பு காணப்படுவதாக வேளாண்மைத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கோடை தொடங்கும் முன்னரே தற்போது 99 குளங்கள் வறண்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்குப் பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகள் உள்ளன. இந்த 6 அணைகளிலும் தற்போது 60 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்த அணைகளில் நீர் இருப்பு 34 சதவீதமாக இருந்தது. அதைவிட 26 சதவீதம் அதிகமாக தற்போது அணைகளில் தண்ணீர் உள்ளது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று 93 அடியாக இருந்தது. நீர் இருப்பு சதவிகிதம்- 48.95. கடந்த ஆண்டு இதேகாலத்தில் நீர்மட்டம் 69.65 அடியாக இருந்தது.

156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் தற்போது 95.60 அடியாக உள்ளது. நீர் இருப்பு சதவிகிதம்- 33.49. கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம் 72.51 அடியாக இருந்தது.

118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் தற்போது 96.05 அடியாக உள்ளது. நீர் இருப்பு சதவிகிதம்- 62.15. கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம் 84.90 அடியாக இருந்தது.

49.20 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் தற்போது 40.75 அடியாக உள்ளது. இந்த அணையின் நீர் இருப்பு சதவிகிதம்- 65.80. கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம் 65.80 அடியாக இருந்தது.

22.96 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் தற்போது 13.31 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு சதவீதம்- 21.94. கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம் 12.50 அடியாக இருந்தது.

52.50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தற்போது 23.75 அடியாக உள்ளது. நீர் இருப்பு சதவிகிதம்- 26.30. கடந்த ஆணஅடு இதே காலத்தில் நீர்மட்டம் 2 அடியாக மட்டும் இருந்தது.

1 மாதத்துக்குள் 99 குளங்கள் வறட்சி:

மாவட்டத்தில் 740 கால்வரத்து குளங்கள், 550 மானாவாரி குளங்கள் என்று மொத்தம் 1290 குளங்கள் உள்ளன. இதில் 33 கால்வரத்து குளங்களில் 3 மாதத்துக்கும், 355 குளங்களில் 2 மாதத்துக்கும், 328 குளங்களில் 1 மாதத்துக்கும் தேவையான தண்ணீர் உள்ளது. 24 குளங்கள் வறண்டுள்ளன.

இதுபோல் 4 மானாவாரி குளங்களில் 3 மாதத்துக்கும், 128 குளங்கஅளில் 2 மாதத்துக்கும், 343 குளங்களில் 1 மாதத்துக்கும் தேவையான தண்ணீர் உள்ளது. 75 குளங்கள் வறண்டுள்ளன.

மொத்தமாக 99 குளங்கள் தற்போதைய நிலவரப்படி வறண்டிருக்கின்றன. கோடை காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே 99 குளங்கள் மாவட்டத்தில் வறண்டிருக்கிறது. கடந்த 1 மாதத்துக்கு முன் அனைத்து குளங்களிலும் தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் ஆண்டு இயல்பான மழையளவு 814.8 மி.மீ. இவ்வாண்டு இதுவரை 22.70 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் ஒவ்வொரு மாதமும் பெறப்பட்ட மழையளவு (மி.மீட்டரில்) அடைப்புக்குள் இயல்பான மழையளவு விவரம்:

ஜனவரி- 4.52 (50.2), பிப்ரவரி- 13.8 (30.2), மார்ச்- 14.73 (41.3), ஏப்ரல்- 44.16 (59.8), மே- 21.75 (38), ஜூன்- 38.88 (29.6), ஜூலை- 14.07 (26.4), ஆகஸ்ட்- 96.34 (23.30), செப்டம்பர்- 116.65 (30.20), அக்டோபர்- 261.11 (166), நவம்பர்- 242.98 (2208.20), டிசம்பர்- 181.11 (111.60). மொத்தம்- 1050.1 (814.80).

நெல், பயிர் சாகுபடி விவரம்:

மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டில் 52900 ஹெக்டேரில் நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் இதுவரை 39751 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 34283 ஹெக்டேரில் மட்டுமே நெல் சாகுபடி இருந்தது.

இதுபோல் 50 ஹெக்டேரில் சிறுதானியங்கள் சாகுபடி இலக்கை மிஞ்சி இதுவரை 179 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 142 ஹெக்டேரில் சாகுபடி இருந்தது. 7400 ஹெக்டேரில் பயறுவகை பயிர்கள் சாகுபடி இலக்கில் இதுவரை 1341 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 980 ஹெக்டேரில் சாகுபடி இருந்தது.

1010 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி இலக்கில் இதுவரை 476 ஹெக்டேரில் சாகுபடி முடிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 252 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. 120 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி இலக்கில் இதுவரை 31 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு அதைவிட குறைவாக 12 ஹெக்டேரில் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. 85 ஹெக்டேரில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி இலக்கை தாண்டி இதுவரை 270 ஹெக்டேரில் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு 209 ஹெக்டேரில் சாகுபடி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x