திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவில் நடைபெற்ற கொடியேற்றம்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழாவில் நடைபெற்ற கொடியேற்றம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசம்

Published on

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்றான திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 21-ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

இதையடுத்து இன்று கோட்டை மாரியம்மன்கோயிலில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக பாலக்கோம்பை எடுத்து நகரின் முக்கியவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தில் ஊன்றப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட அம்மன் உருவம்பொறித்த மஞ்சள் நிறகொடி எடுத்துவரப்பட்டு கொடிமரத்தின் கீழ் வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் தினமும் பல்வேறு சமூகத்தினரின் மண்டகப்படி நிகழ்ச்சியில் அம்மன் வீதிஉலாநிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

விழாவின் முக்கியநிகழ்வான பூக்குழி இறங்குதல் மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 7-ம் தேதி தசாவதாரமும், 8-ம் தேதி மஞ்சள்நீராடல் மற்றும் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதையடுத்து மார்ச் 9-ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 10-ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.

விழாநாட்களில் திண்டுக்கல் மற்றும் இதன்சுற்றுப்புற கிராமமக்கள் முளைப்பாரி, மாவிளக்கு, அக்கினிசட்டி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in