மணல் கடத்தலைக் கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடத்தல் கும்பலுக்கும் எச்சரிக்கை

மணல் கடத்தலைக் கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு வெடிகுண்டு மிரட்டல்: கடத்தல் கும்பலுக்கும் எச்சரிக்கை
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் மணல் வளம் சுரண்டப்படுவதைக் கண்டிக்கும் வகையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபாலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு பார்சல் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி தபால் நிலைய அலுவலக வாசலில் உள்ள தபால் பெட்டியில் இருந்து, கார்த்திகேயன் என்பவர் நேற்று காலை 9 மணியளவில் கடிதங்களை சேகரித்துக் கொண்டிருந்தார். வேலூர் மாவட்ட ஆட்சியரின் பெயரில் சற்று கனமான பார்சல் கவர் ஒன்று இருந்தது.

கவரின் ஓரத்தில் வயர் தெரிவதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த கார்த்திகேயன், வெடிகுண்டு என கூச்சலிட்டு தூக்கி வீசினார். இந்த தகவலை அடுத்து, அங்கு வந்த சத்துவாச்சாரி போலீஸார் பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதில், 3 ஸ்லரி வகை வெடிமருந்து, 2 டெட்டனேட்டர் மற்றும் ஒரு மெமரி கார்டு இருந்தன.

இதுதொடர்பாக டிஐஜி தமிழ் சந்திரன், எஸ்பி செந்தில்குமாரி ஆகியோர் நடத்திய விசாரணை யில், திருப்பூரைச் சேர்ந்த தனியார் வெடிமருந்து நிறுவனத்தில் இந்த வெடிபொருள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பார்சலில் இருந்த மெமரி கார்டை போலீஸார் ஆய்வு செய்தபோது, மிரட்டல் கடிதம் ஒன்றின் பதிவு இருந்தது.

அதில் கூறப்பட்டிருந்ததாவது:

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கவில்லை. மணல் குவாரி தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் விரைவில் நடத்த வேண்டும். இல்லை என்றால் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்படும். இப்படிக்கு, இயற்கை வள பாதுகாப்பு அமைப் பாளர்கள் என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. அதன் நிர்வாகிகள் 23 பேரின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் போலீஸார் மத்தியிலும் வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு குறித்தும் அதன் நிர்வாகிகள் பற்றியும் தீவிரமாக விசாரிக்கப் பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in