புதுவை பல்கலை. கட்டண உயர்வு: தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
Updated on
1 min read

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை திரும்பப் பெறக்கோரி கடந்த 19 நாட்களுக்கும் மேலாக பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாக அலுவலகம் முன்பு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாளை (பிப்.26) காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுவை வருகிறார். குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி பல்கலைக்கழகம் முழுவதும் மத்திய ரிசர்வ் படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாளை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு பட்டமளிக்க உள்ளதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் இன்று (பிப்.25) கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in