

தியாகிகள், தேசத் தலைவர் களின் மணிமண்டபங்கள், நினை வகங்கள், உருவச் சிலைகள் அமைக்கவும், புனரமைக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.94.07 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள தாக செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணிகள் தொடர்பான 2 நாள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
அரசின் திட்டங்கள், சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் ஆர்வமாகவும் விரைவாகவும் பணியாற்ற வேண்டும். அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்து செயலாற்ற வேண்டும். செய்தியாளர்கள், செய்தி நிறுவனங்களுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ரூ.94.07 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்கள், தமிழகம் மேன்மையுற பாடுபட்டவர்களின் புகழ் நிலைக்கவும் அவர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் புதிய மணிமண்டபங்கள், சிலைகள் நிறுவவும் கலையரங்கம், நினை வகங்கள் கட்டவும் சிலைகள் புனரமைக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.94.07 கோடி நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார்.
மாதந்தோறும் வெளியாகும் ‘தமிழரசு’ இதழ் சொந்த கட்டிடத்தில் இயங்க ஏதுவாக ரூ.6.53 கோடியும், அச்சு இயந்திரங்கள் வாங்க ரூ.4 கோடியும் நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் பேசி னார்.
கூட்டத்தில் செய்தித்துறை செய லாளர் மூ.ராசாராம், செய்தித்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் இயக்குநர் எழிலழகன், இணை இயக்குநர்கள் தானப்பா, ரவீந்திரன், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.