ஹஜ் பயணம்: தமிழக ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும்; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என, பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்.25) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு, தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள மாநில ஹஜ் கமிட்டிக்கு 6,028 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 7 குழந்தைகளும் அடங்கும்.

ஆனால், தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 3,736 இடங்களைத் தான் இந்திய ஹஜ் கமிட்டி ஒதுக்கீடு செய்துள்ளது. மற்ற பயணிகளும் தங்கள் விண்ணப்பங்கள் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

ஆதலால், ஹஜ் கமிட்டி பரிந்துரைத்த 6,028 பேரின் விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும். மத்திய அரசின் ஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் உள்ள மற்ற மாநிலங்களின் இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கித் தர வேண்டும்" என கடிதத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in