

சென்னை விமான நிலையத்தில் 40 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் விமானம் நேற்று காலை புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த சென்னை மண்ணடியை சேர்ந்த ஜவகருல்லா கனி முகமது (40) என்பவரின் பெரிய பையை சோதனை செய்தனர். அதில் 40 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.