

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக நீதிக் கான வழக்கறிஞர்கள் பேரவை யின் தலைவர் கே.பாலு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 1971-ம் ஆண்டு வரை மதுவிலக்கு அமலில் இருந்தது. மதுவிலக்கு ரத்து செய் யப்பட்ட பிறகு கள், சாராயம், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை தனி யாருக்கு ஏலம் விடப்பட்டது. 2003-ம் ஆண்டில் மது விற்பனை டாஸ்மாக் வசம் ஒப்படைக்கப்பட் டது. டாஸ்மாக் நிறுவனமே மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை ஏராளமாக திறந்து விற்கத் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 6,815 மதுக்கடைகள் உள்ளன. பள்ளி, கல்லூரிகள், பஸ், ரயில் நிலை யங்கள், குடியிருப்பு பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களிலும் மதுபானக் கடைகள் இருக்கின்றன. இந்த இடங்களில் இருந்து குறிப்பிட்ட தொலைவில்தான் மதுபானக் கடைகள் இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு மிக அருகில் டாஸ்மாக் கடைகள் பகல் முழுவதும் திறந்திருப்பதால் மாணவர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, எதிர்கால தலை முறையே பாதிக்கும் அபாயம் உள்ளது.
மது குடிப்பவர்களால்தான் சமூகத்தில் பல குற்றங்கள் நடக்கின்றன. தற்கொலை, விபத்து களும் அதிகரித்துள்ளன. எச்ஐவி தொற்று, காசநோயால் ஏற்படும் உயிரிழப்பைவிட, குடிப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
தற்போது காலை 10 முதல் இரவு 10 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கின்றன. இந்த நேரத்தை மாலை 5 முதல் இரவு 10 மணி வரை என்று குறைத்தால் மது குடிப்போர் எண்ணிக்கை பாதியாகக் குறையும். அதனால் குற்றச் செயல்கள் குறைந்து, சமூக அமைதி மற்றும் பொது அமைதி ஏற்படும். இளைய தலைமுறையின் திறனும், சுகா தாரமும் மேம்படும். எனவே, டாஸ் மாக் மதுபானக் கடைகள் திறந் திருக்கும் நேரத்தைக் குறைக்கும் படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப் பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.