தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தொண்டர்கள் உற்சாகம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தொண்டர்கள் உற்சாகம்
Updated on
1 min read

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் 7-வது தெரு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் பி.ஏ.ஆறுமுகநயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுனரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் விவசாய சங்க தலைவர் சிவத்தையாபுரம் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு உட்பட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in