Published : 09 Aug 2015 10:45 AM
Last Updated : 09 Aug 2015 10:45 AM

சென்னை அடையாறு காந்தி நகர் 4-வது சாலைக்கு பா.ராமச்சந்திர ஆதித்தன் பெயர்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை அடையாறு காந்தி நகர் 4-வது பிரதான சாலையின் பெயர் ‘பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ என மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

ஜனநாயகத்தின் 4-வது தூணாக போற்றப்படும் பத்திரிகை துறை யில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றியவர் பா.ராமச்சந்திர ஆதித்தன். பாமர மக்களும் செய்திகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் செய்திகளை வெளி யிட்டதன் மூலம் பத்திரிகை உலகில் தனக்கென தனி இடத்தை அவர் பெற்றிருந்தார். தமிழ்நாடு மெர்க் கண்டைல் வங்கியை மீட்டெடுக்க வும் முக்கிய பங்காற்றினார்.

பத்திரிகை உலகில் தனி இடத்தை பெற்றிருந்த பா.ராமச் சந்திர ஆதித்தன் நினைவை போற் றும் வகையில் சிறப்பு செய்ய வேண் டும் என்பது என் விருப்பம். ‘மாலை முரசு’ நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன், தன் தந்தை பா.ராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு காந்தி நகர், 4-வது பிரதான சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என என்னிடம் வேண்டுகோள் விடுத் தார். அதை ஏற்று காந்தி நகர் 4-வது பிரதான சாலையை ‘பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை’ என மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர மேயருக்கு உத்தரவிட்டேன்.

அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடந்த சென்னை மாநக ராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாலை பெயர் மாற்றம் செய்வதற்கான அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக் கப்படும். புதிதாக சூட்டப்பட்ட சாலை பெயர்ப் பலகையை விரை வில் நான் திறந்து வைப்பேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

தலைவர்கள் நன்றி

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு சென்னை அடையாறு காந்தி நகர் 4-வது பிரதான சாலைக்கு பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருப்பது மிகப் பொருத்த மானது, மகிழ்ச்சிக்குறியது என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளி யிட்ட அறிக்கையில், சாலைக்கு பா.ராமச்சந்திர ஆதித்தன் பெயரை சூட்டியிருப்பது, பத்திரிகை உலகுக்கு கிடைத்த அங்கீகாரம். அதை நான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ராமச்சந்திர ஆதித்தன் பெயரை அவர் வீடு அமைந்த சாலைக்கு சூட்டியதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமக தலைவர் சரத்குமாரும் நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x