பிரணாப் முகர்ஜி மனைவி மறைவு: ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

பிரணாப் முகர்ஜி மனைவி மறைவு: ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலை வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இரங்கல் செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஆளுநர் ரோசய்யா:

குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். குடியரசுத் தலைவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா:

சுவ்ரா முகர்ஜி மரணமடைந்த செய்தி கேட்டு கவலையுற்றேன். இந்த சூழலில் குடியரசுத் தலைவர் பிரணாப்புக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை. அவ ருக்கும் அவரது குடும்பத்தினருக் கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு மன உறுதியை அளிக்குமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். நீண்டகாலமாக இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர், அதில் இருந்து விடுபடாமலேயே மறைந்துவிட்டார். மனைவியை இழந்து வாடும் குடியரசுத் தலைவருக்கும், அவரது குடும்பத் துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ள னர்.

தேமுதிக தலைவர் விஜய காந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in