

ஆம்பூர் கலவரத்தில் சேதமடைந்த பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகை 8 வாரத்துக்குள் வழங்கப் படும் என்று அரசு தெரிவித்த தையடுத்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஆம்பூர் கலவரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஜூன் 25-ம் தேதி வேலூர் மாவட்டம், வண்ணாரக்கொல்லை பகுதியை சேர்ந்த ஷகீல் அகமது, பள்ளி கொண்டா காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப் பட்டு விடுவிக்கப்பட்ட பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆம்பூர் பகுதியில் மறுநாள் நடந்த கலவரத்தில் அரசு பஸ்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள், காவல்நிலைய வேன் உள்ளிட்ட பொதுச் சொத்துகளும், தனியார் சொத்துகளும் சேதப்படுத்தப் பட்டன. கல்வீச்சில் காவல்துறை யினர் சிலர் காயமடைந்தனர். இந்த கலவரத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொது மற்றும் தனி யார் சொத்துகள் சேதமடைந்தன.
எனவே, உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கும் படி தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், டிஜிபி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கடந்த மாதம் 20-ம் தேதி மனு கொடுத்தேன். அதன்மீது நடவடிக்கை எடுக்கவி ல்லை. எனவே, எனது மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
ஆம்பூர் கலவரத்தில் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து 8 வாரங்களுக்குள் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் அளித்த தகவல் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கலவரத்தில் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று அரசு வழக்கறிஞர் அளித்த தகவல் பதிவுசெய்யப்பட்டது.