

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சரியாகத் திட்டமிடாமல் கட்டப்பட்ட அம்மா உணவகம் மூடிக் கிடப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
ஆண்டிபட்டி அருகே கானா விலக்கில் உள்ள அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் ஒதுக்குப் புறத்தில், பழைய கட்டிடத்தில் மராமத் துப்பணி மேற்கொள்ளப்பட்டு அம்மா உணவகம் கட்டப்பட்டது. சரியாக திட்டமிடாமல் கட்டப்பட் டதால், உணவகம் பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கூறுகையில், மருத்துவ மனைக்கு உள்ளூர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து நுற்றுக்கணக்கானோர் வெளிநோயாளிகளாக தினமும் வந்து செல்கின்றனர். சர்க்கரை உள்ளிட்ட சில நோய்களுக்கு, எந்த உணவும் சாப்பிடாமல் அதிகாலையிலே பரிசோதனைக்காக வரவேண்டி உள்ளது. பரிசோதனை முடிந்த பின்னர் வெளியிடங்களில் சாப்பிட சென்றால் கூடுதலாகச் செலவாகிறது. தரமான உணவும் கிடைப்பதில்லை, உள்நோயாளிகளுடன் தங்கியுள்ள, அவர்களது உறவினர்களும் உணவுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். விரைவில் அம்மா உணவகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மருத்துக்கல்லூரி முதல்வர் கே.கதிர்காமுவிடம் கேட்டபோது, மக்கள் பார்வையில் படும்படியாக மருத்துவமனை நுழைவாயில் அருகே புதிதாக அம்மா உணவகம் கட்டப்பட்டு வருகிறது என்றார்.