

மது, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க பாமகவை ஆட்சியில் அமர்த்த சபதம் ஏற்போம் என மதுரையில் நடைபெற்ற பாண்டிய மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையை அடுத்த வாடிப் பட்டி அருகே பாமக பாண்டிய மண்டல மாநாடு நேற்று நடை பெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்பு மணி, மாநிலத் தலைவர் ஜி.கே.மணி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகம் பொருளா தாரத்தில் வளர்ச்சி பெற முட்டுக் கட்டையாக இருக்கும் சீரழிவு களை அகற்ற வேண்டும். தமிழ கத்தின் வளர்ச்சிக்கு அரசு வகை செய்யப்படாத நிலையில், இயற் கையாக ஏற்படும் வளர்ச்சிக்கும் மதுவும், ஊழலும்தான் முட்டுக் கட்டை போடுகின்றன. தமிழகத்தின் வளர்ச்சி குறைபாட்டுக்கு முக்கிய காரணம் கல்வி, சுகாதாரம், விவசாய துறைகள் மீது உரிய கவனம் செலுத்தப்படாததுதான்.
மது குடித்துவிட்டு பணி செய்யத் தவறுவதால் ஏற்படும் உற்பத்தி இழப்பு மட்டும் நடப்பாண்டில் ரூ.2.20 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சத்துணவுக்கு முட்டை, நியாய விலைக்கடையில் பருப்பு, மின்சாரம் வாங்குவதிலும், பணி நியமனம், கிரானைட், தாது மணல் என திரும்பிய பக்க மெல்லாம் தமிழகத்தில் ஊழல் தலைதூக்கியுள்ளது. இந்த ஊழல் பசிக்காக பொறியாளர் முத்துக்குமாரசாமி உட்பட பல அதிகாரிகள், மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கிரானைட், தாது மணலை அரசே கையாண்டால் தென்மாவட்டங் களில் பல்லாயிரம் பேருக்கு நல்ல ஊதியத்துடன் வேலை வழங்க முடியும். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் தொழில் முதலீடுகளை தென்மாவட்டங் களில் கொண்டுவரும் தொலை நோக்குப் பார்வை திராவிட கட்சி களிடம் இல்லாததே தென்மாவட்ட வளர்ச்சியின் தேக்க நிலைக்கு காரணம்.
மது, ஊழல் என்ற இரு தீமைகளை ஒழித்தால் தமிழகம் தன்னிகரில்லாத வளர்ச்சி பெறுவது உறுதி. இதை செய்து முடிக்க பாமகவினால் மட்டுமே முடியும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.