சி.பா.ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர்: அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை

சி.பா.ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர்: அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை
Updated on
1 min read

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை திறந்துவைத்தார்.

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் திருச்செந்தூா் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மணிமண்டபத்தை திறந்துவைக்க வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் அங்கிருந்து விழா நடைபெறும் வீரபாண்டியபட்டணத்திற்கு கார் மூலம் வந்தடைந்தார். அவரை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். தொடர்ந்து பா.சிவந்தி ஆதித்தனார் சிலையையும் திறந்துவைத்தார்.

விழா அரங்கில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவப் படத்திற்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னையில் இருந்து விமானம் தாமதமாக வந்ததால்,, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. முதல்வர் விமான நிலையத்திலிருந்து நேரடியாக திருச்செந்தூர் சென்றுவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in