Published : 22 Feb 2020 08:25 AM
Last Updated : 22 Feb 2020 08:25 AM

தனியார் நிறுவனங்கள் நிதியுதவியுடன் நகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் நிறுவனங்கள் நிதியுதவியுடன் நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் வழங்கும் சி.எஸ்.ஆர். நிதி மூலம் 35 ஆயிரம் பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதே வழிமுறையில் நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த ஆண்டு பொதுத்தேர்வு கொண்டுவந்தபோது, அனைவரும் அச்சப்பட்டனர். ஆனால், 97 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர். நீட்தேர்வுக்கு தேவையான பாடங்கள், பிளஸ் 2 பாடப் புத்தகத்திலேயே உள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x