Published : 21 Feb 2020 20:28 pm

Updated : 21 Feb 2020 20:28 pm

 

Published : 21 Feb 2020 08:28 PM
Last Updated : 21 Feb 2020 08:28 PM

ஹாட் லீக்ஸ்: தென்றலைத் தீண்டிய ஸ்டாலின்!

stalin-hot-leaks

உள்ளாட்சி தேர்தலில் சீட் கொடுக்க பேரம் பேசியதாக கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜுக்கு எதிராக அண்மையில் ஆடியோ ஒன்று ரிலீஸ் ஆகி பரபரப்பானது. செல்வராஜை பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று தலைமைக்கு புகார்களைத் தட்டிவிட்ட கோஷ்டிகளில் யாரோ தான் இந்த ஆடியோ ரிலீஸை செய்ததாகச் சொல்கிறார்கள். இதற்கிடையில், கோவை திமுக மாவட்டங்களைத் திருத்தி அமைத்த ஸ்டாலின், புறநகர் தெற்கு மாவட்டத்துக்கு மீண்டும் தென்றலையே செயலாளராக அறிவித்தார். அதேசமயம், ஆடியோ ரிலீஸ் அதிர்வுகளைக் கிளப்பியதால் தெற்கு மாவட்ட நிர்வாகிகளை அறிவாலயத்துக்கே அழைத்து விசாரித்தாராம் ஸ்டாலின்.

அப்போது செல்வராஜிடம் சற்று கடுமை காட்டிய ஸ்டாலின், “நான் தான் அடுத்த சிஎம் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆனால், அதற்கான உழைப்பு உங்களிடம் இல்லை. திமுகவை அரியணை ஏற்ற நான் என்ன பாடுபடுகிறேன்... அதற்காக எத்தனை மணி நேரம் உழைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கு பஞ்சாயத்துப் பண்றது மட்டும் தான் என் வேலையா? உங்க மாவட்டத்துல என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரியும். இனியும் அப்படி நடந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். மாவட்ட கழகத்தையே கலைச்சுட்டு பொறுப்புக்குழுவை போட்டுருவேன்” என்று எச்சரித்து அனுப்பினாராம்.


- காமதேனு இதழிலிருந்து (பிப்ரவரி 23, 2020)

அன்பு வாசகர்களே....


வரும் மார்ச் 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



ஸ்டாலின்திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ்ஸ்டாலின் எச்சரிக்கைதிமுகஉள்ளாட்சி தேர்தலில் சீட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author