திருப்பூரில் 41 சாயப் பட்டறைகளை மூட வேண்டும்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

திருப்பூரில் 41 சாயப் பட்டறைகளை மூட வேண்டும்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

திருப்பூரில் விதிகளை மீறி பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயக்கப்பட்டு வந்ததால், அதில் இணைந்துள்ள 41 சாயப் பட்டறைகளை மூட பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த ஸ்டேன்டர்டு கலர்ஸ் நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி திருப்பூர் முருகம்பாளையத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (சிஇடிபி) அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு சாயப் பட்டறைகள் உறுப் பினர்களாயின. அதில் ஸ்டேன்டர்டு கலர்ஸ் நிறுவனமும் ஒன்று.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிஇடிபியில் முறையாக சோதனை ஓட்டம் நடைபெறவில்லை. சிஇடிபி நடவடிக்கையில் வெளிப்படை தன்மை இல்லை. அதனால் சிஇடிபி யின் சோதனை ஓட்டத்தில் ஸ்டேன்டர்டு கலர்ஸ் நிறுவனம் இணையவில்லை.

சோதனை ஓட்டத்தில் இணையா விட்டால், உரிமம் ரத்து செய்யப் படும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அழுத்தம் கொடுக்கிறது. அவ்வாறு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த 2-ம் அமர்வு, கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்து, சிஇடிபி நிலை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது.

இம்மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட கண்காணிப்பு குழுவின் ஆய்வறிக்கையில், சிஇடிபியில் உறுப்பினர்களாக உள்ள 67 சாயப் பட்டறைகளில் 41 பட்டறைகள் சிஇடிபி சோதனை ஓட்டத்தில் இணைந்துள்ளன. அங்கு சோதனை ஓட்டத்துக்கு பதிலாக தொழில் ரீதியில் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, விதி களை மீறி இயக்கப்பட்ட சிஇடிபி யின் சோதனை ஓட்டத்தில் இணைந் துள்ள 41 சாயப் பட்டறைகளின் இயக்கத்தை உடனடியாக நிறுத்த வும், அச்சாயப் பட்டறைகளை மூடவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் துக்கு உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in