Published : 21 Feb 2020 12:33 PM
Last Updated : 21 Feb 2020 12:33 PM

நியூரோஜென் மருத்துவமனையில் ஸ்டெம் செல் சிகிச்சை பெருமூளை வாதத்திலிருந்து குணமடையும் குழந்தை: மார்ச் 1-ம் தேதி சென்னையில் இலவச ஆலோசனை முகாம்

பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பை ‘நியூரோஜென் பிரெயின் அன்டு ஸ்பைன் இன்ஸ்டிட்யூட்' மருத்துவ மனையில் வழங்கப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சையால் 7 வயது குழந்தை குணமடைந்து வருகிறது. இதுபோன்ற நோய்களால் பாதிக் கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம் மார்ச் 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மும்பையில் உள்ள ‘நியூரோஜென் பிரெயின் அன்டு ஸ்பைன் இன்ஸ்டிட்யூட்' மருத்துவமனையின் துணை இயக்குநர் நந்தினி கோகுல்சந்திரன், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பிறக்கும்போதே குழந்தை களுக்கு ஏற்படும் மூளை பாதிப்பை குணப்படுத்த முடியாது என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்று வளர்ந்துவரும் ஆய்வுகளால் ஸ்டெம் செல் சிகிச்சை மூலம், பாதிப்புக்குள்ளான மூளைத் திசுக்களை குணப்படுத்த முடியும் என்பது தெரியவந்துள்ளது.

மூளை பாதிப்புகளுக்கு மும்பை யில் உள்ள நியூரோஜென் மருத் துவமனை ஸ்டெம் செல் சிகிச்சை வழங்கி வருகிறது. இந்த சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. நோயாளிகளின் எலும்பு மஜ்ஜை யில் இருந்து ஸ்டெம் செல்கள் ஒரு சிறிய ஊசி மூலம் எடுக்கப்படும். பின்னர் அது பதப்படுத்தப்பட்டு, நோயாளிகளின் முதுகெலும்பில் மீண்டும் செலுத்தப்படும்.

நோயாளியின் உடலில் இருந்தே செல்களை எடுத்து, அவர்களுக்கே பயன்படுத்துவதால், பக்க விளைவு களோ, மருந்தை ஏற்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளோ ஏற்படுவதில்லை. எனவே இந்த ஸ்டெம் செல் சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வி.வெங்கையா- அஷ்வினி தம்பதி யர், தங்கள் 7 வயது குழந்தை ரோஷ னுக்கு பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நியூரோஜென் மருத்துவமனையை அணுகினர். அக்குழந்தைக்கு ஸ்டெம் செல் சிகிச்சை வழங்கப்பட்டது.

சரி செய்ய முடியாத இந்த நரம்பியல் கோளாறில் இருந்து ரோஷன் மீண்டு வந்துக்கொண்டிருக்கிறார். இப்போது அவரால் சமநிலையில் அமரவும், நிற்கவும் முடிகிறது. இப்போது அவர் உணவை தானே உண்கிறார். பல் தேய்ப்பது, குளிப்பது போன்ற தினசரி வேலைகளை, மற்றவர்களை சார்ந்திராமல் அவரே செய்கிறார்.

இந்த சிகிச்சை குறைந்த செல வில் அளிக்கப்படுகிறது. ஏழை குழந்தைகளுக்கு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் கொடை யாளர்கள் மூலமாக இலவசமாக செய்யப்படுகிறது. இக்குழந் தையை போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம் சென்னை யில் மார்ச் 1-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் பெற்றோர், 9821529653 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின்போது மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.புஷ்கலா உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x