

துறைத் தலைவர் நியமன விவகாரம் தொடர்பாக சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை மாணவர்கள் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாக வியல் துறை தலைவராக இருந்த கோட்டீஸ்வர பிரசாத் மீண்டும் அத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, இடைப்பட்ட காலத் தில் துறைத் தலைவராக பணி புரிந்த ஆர்.மணிவண்ணன் மீண்டும் பேராசிரியராக பணி யமர்த்தப்பட்டார்.
இந்த நிலையில், துறைத் தலைவராக இருந்த மணி வண்ணன் பேராசிரியராக பணி யிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறி நிர்வாகவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று பிற்பகலில் போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பதிவாளர் பா.டேவிட் ஜவகர் அழைத்துப் பேசினார். துறைத் தலைவர் நியமனம் நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. இதில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது என்று பதிவாளர் கூறியதாக நிருபர்களிடம் மாண வர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதா கவும் அவர்கள் கூறினர்.