

அடுக்குமாடி கட்டிடங்களை கட்டியதும் அதற்கான ஒப்புதலை பெறுவதற்காக வழங்கப்படும் நிறைவு சான்றுகளை (completion certificate) உரியவர்கள்தான் தயாரித்தார்களா என்பது ஆய்வு செய்யப்படும் என்று சிஎம்டிஏ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஎம்டிஏ உறுப் பினர் செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
சிறப்பு கட்டிடங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி முடித்ததும், அதற்கான நிறைவுச் சான்றுகளை, சம்பந்தப்பட்ட கட்டி டத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த உரிமம் பெற்ற சர்வே யர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டிடவியல் நிபுணர்கள்தான் வழங்க வேண்டும் என்று சிஎம்டிஏ கூறியுள்ளது.
ஆனால், கட்டுமானப் பணிகளில் ஈடுபடாத சர்வேயர்கள், பொறி யாளர்கள், மற்றும் கட்டிடவியல் நிபுணர்கள் சான்றிதழ்களை வழங்குவது சிஎம்டிஏவின் கவனத்துக்கு வந்துள்ளது.
அதன்படி, 2 சர்வேயர்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, நிறைவுச் சான்றுகளை சமர்ப்பிக் கும்போது, அதை தயாரித்தவர் யார் என்பதை அறிவதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதனை சிஎம்டிஏ ஆய்வு செய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.