

சென்னை அடையாறு, குரோம் பேட்டையில் ரூ.150 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் ஷோரூம் கள் வரும் 18-ம் தேதி திறக்கப் படுகின்றன. திறப்புவிழாவில் நடிகர்கள் பிரபு, நாகார்ஜுனா கலந்துகொள்கின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவ னம், நாட்டின் மிகப்பெரிய நகை தயாரிப்பு, விற்பனை நிறுவனங் களில் ஒன்றாக விளங்குகிறது. உலகிலேயே அதிக அளவிலான நகைகளுடன் சென்னை தி.நகரில் பிரம்மாண்ட ஷோரூமை கடந்த ஏப்ரல் மாதத்தில் திறந்த கல்யாண் ஜுவல்லர்ஸ், தற்போது அடையாறு, குரோம் பேட்டையில் கிளைகளை அமைத் துள்ளது. அடையாறு ஷோரூம் 10 ஆயிரம் சதுரஅடி பரப்பி லும், குரோம்பேட்டை ஷோரூம் 20 ஆயிரம் சதுரஅடி பரப்பிலும் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டுள்ளன. இந்த ஷோரூம்கள் திறப்பு விழா வரும் 18-ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது.
இதுபற்றி கல்யாண் ஜுவல் லர்ஸ் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.எஸ்.கல்யாணராமன் கூறியதாவது:
தரம், வெளிப்படையான விலை, புதிய மாடல்கள் என நகை விற்பனையில் தனி முத்திரை பதித்துள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் ஷோரூம்கள் உலகம் முழுவதும் 83 இடங்களில் உள்ளன. தி.நகர் கிளை கடந்த ஏப்ரலில் திறக்கப்பட்டது. மக்கள் அளித்த அமோக வரவேற்பு காரணமாக, சென்னையில் அடையாறு, குரோம்பேட்டை என மேலும் 2 கிளைகள் திறக்கப்படுகின்றன. இந்த ஷோரூம்களை எங்கள் விளம்பர தூதர்களான நடிகர்கள் பிரபு, நாகார்ஜுனா வரும் 18-ம் தேதி திறந்துவைக்கின்றனர். தரமாக, சிறந்த டிசைனில் தயாரிக்கப்பட்ட தங்க, வைர நகைகள் இங்கு கிடைக்கும். எங்கள் மற்ற அனைத்து கிளைகள் போல, இங்கும் மக்கள் சிறந்த நகை வாங்கும் அனுபவத்தை பெறமுடியும்.
தமிழகத்தில் கிளைகள் அமைக்க மொத்தம் ரூ.750 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் 150 வாடிக்கையாளர் சேவை மையங்களை ‘மை கல்யாண்’ என்ற பெயரில் மினி டைமண்ட் ஸ்டோராக மாற்றி யுள்ளோம்.
வேளச்சேரி, அண்ணா நகரில்..
இந்த நிதியாண்டுக்குள் 100 ஷோரூம்கள் என்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். சென்னை வேளச்சேரி, அண்ணா நகரில் இந்த நிதியாண்டுக்குள் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஷோரூம் அமைக்கப்படும். இந்த சூழ்நிலையில் தங்கம் விலை குறைவது, வியா பாரத்துக்கு நல்ல அறிகுறி யாகவே தெரிகிறது. இவ்வாறு டி.எஸ்.கல்யாணராமன் கூறி னார்.