பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு 17 பள்ளி வாகனங்களின் எப்.சி. ரத்து

பாதுகாப்பு அம்சங்கள் குறைபாடு 17 பள்ளி வாகனங்களின் எப்.சி. ரத்து
Updated on
1 min read

அவசர கதவு குறைபாடு, சரியில்லாத படிகள், தீயணைப்புக் கருவிகள் இயங்காதது உள்ளிட்ட குறைபாடுகள் இருந்ததையடுத்து, சென்னையில் 17 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று (எப்.சி.) தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயக்கப்படும் 36,389 பள்ளி வாகனங்களில் பாது காப்பு அம்சங்கள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்று 33 சிறப்புக் குழுக்கள் மூலம் கடந்த 8-ம் தேதி முதல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த தேதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை ஆணை யரகம் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு (ஆர்.டீ.ஓ.) அறிவிப்பை அனுப்பி யுள்ளது.

இதன்படி, சென்னை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. சார்பில் நந்தனம் கலைக் கல்லூரியில் பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு திங்கள்கிழமை ஆய்வு நடத்தப் பட்டது. ஆர்.டி.ஓ. அசோக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தர், விஜயக் குமார், செழியன் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடுத்த ஒரு மாதம் முழுவதும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் வாகன ஆய்வுப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

இதுவரை மொத்தம் 96 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டுள்ளன. அதில் 17 வாகனங் களில் அவசர கால கதவுகள் இயங்காதது, படிகள் குறைபாடு, தீயணைப்பு கருவிகள் இயங்கா தது என்பது போன்ற குறைபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 17 வாகனங் களின் தகுதிச் சான்று (எப்.சி.) தற் காலிகமாக ரத்து செய்யப்பட் டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in