Published : 20 Feb 2020 06:32 AM
Last Updated : 20 Feb 2020 06:32 AM

பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்கள் அறிவிப்பு; அரசின் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்- பேரவையில் இன்று சட்ட முன்வடிவு தாக்கல் செய்ய திட்டம்?

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பு, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவாக எடுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட முன்வடிவு, சட்டப் பேரவையில் இன்று அறிமுகப்படுத் தப்படலாம் என்று தெரிகிறது.

காவிரி படுகையில் உள்ள டெல்டா பகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட் டங்களில் நெல் விவசாயம் பிரதான மாக உள்ளது. இந்த மாவட்டங்களில் மத்திய அரசின் அனுமதி பெற்று மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் எடுக்கப்பட்டு வரு கிறது. நிலமும் நிலத்தடி நீரும் மாசு படுவதை சுட்டிக்காட்டி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இதற்காக பல்வேறு தொடர் போராட்டங் களையும் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, காவிரி படுகை யில் மேலும் பல இடங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுப்பதற்கான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. அத்துடன், எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கும் பி 2 வகை திட்டங்களுக்கு பொதுமக்களின் கருத்துகளை அறிய வேண்டிய அவசியம் இல்லை என கடந்த மாதம் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

இதற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரி வித்தனர். புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தினர். இந் நிலையில், கடந்த பிப்.9-ம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்’ என அறிவித்தார். இதற்கென சட்டம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை விவசாயிகள், விவசாய சங்கத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்று பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர். பல்வேறு விவசாய சங்கத்தினர் முதல்வரை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அறிவிப்புடன் நிற்கா மல், மறுநாளே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் பழனிசாமி, டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண் டலமாக அறிவித்ததற்கான காரணங் களை சுட்டிக்காட்டி, அதற்கு ஒத் துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இடம் பெறவேண்டிய முக்கிய அம்சங்கள், விதிமுறைகள் குறித்தும், இதை சட்டமாக இயற்றுவதற்கான வழி முறைகள் குறித்தும், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், சட்டத் துறையினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வந்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக அமைச்சரவை பிப்.19-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பான முதல்வரின் அறிவிப்பை கொள்கை முடிவாக எடுத்து ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி நேற்று பேசும்போது, ‘‘பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலம் குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தி விரைவில் வரும்’’ என்று அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி யது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அனைத்து துறை அமைச் சர்கள், தலைமைச் செயலர் கே.சண் முகம், நிதித் துறை செயலர் ச.கிருஷ் ணன், வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அப்போது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றும் தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான சட்டத்தில் இடம் பெறவேண்டிய ஷரத்துக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்பு தல் அளிக்கப்பட்டது.

ஆலோசனை

கூட்டம் 5.30 மணிக்கு முடி வடைந்த நிலையில், முதல்வருடன் அமைச்சர்கள் தனியாக ஆலோ சனை நடத்தினர். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள், அமைச்சர்களின் பத்திரிகை பேட்டிகள் குறித்தும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர் பான சட்ட முன்வடிவு, இன்றைய பேரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x