

அத்தப்பூ கோலமிட்டும், அழகு நடன மாடியும் சென்னை வாழ் கேரளத் தினர் திருவோண நாளினை மகிழ்ச் சியுடன் நேற்று கொண்டாடினர்.
மகாபலி சக்கரவர்த்தியின் நினைவாக ஓணம் பண்டிகையை கேரள மக்கள் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். பத்து நாட்கள் நடக்கும் இந்த பண்டிகையை சாதி மதம் கடந்து கேரளத்தினர் அனைவரும் கொண்டாடி வருகின் றனர். இந்தாண்டு திருவோணம் பண்டிகையை புத்தாடை உடுத் தியும், அத்தப்பூ கோலமிட்டும் கேரள மக்கள் நேற்று கொண்டா டினர்.
ஓணம் பண்டிகை கேரளத்தில் மட்டுமன்றி சென்னையிலும் நேற்று சிறப்பான முறையில் கொண்டாடப் பட்டது. சென்னை வாழ் கேரள மக்கள் சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில், ராஜா அண்ணா மலைபுரம் ஐயப்பன் கோயில் ஆகிய இடங்களில் திரளாக வந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
தங்களின் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி, விஷுக் கனி படையலிட்டு, புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து நடனமாடினர்.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மெட்ராஸ் கேரள சமாஜத்தில் நேற்று மாலை ஓணத்தையொட்டி கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வடம் இழுத்தல், களரி, புலியாட்டம், கதக்களி போன்ற போட்டிகளில் பெண்கள் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் பெருமளவில் பங்கேற் றனர். சென்னையிலுள்ள கல்லூரி களில் படிக்கும் மலையாள மாணவ, மாணவிகளும் ஓணத்தை நேற்றைய தினம் சிறப்பாக கொண்டாடினர்.