Published : 19 Feb 2020 05:38 PM
Last Updated : 19 Feb 2020 05:38 PM

ஜெயலலிதா பிறந்த நாள், பட்ஜெட் விளக்கக் கூட்டம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

வரும் 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளைக் கொண்டாடும் விதத்தில் பிப்.24 முதல் 28 வரை பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்கக் கூட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு:

“அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, மறைந்த ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டும், தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை விளக்கியும் 24.2.2020 - திங்கட்கிழமை முதல் 28.2.2020 - வெள்ளிக்கிழமை வரை சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.

கட்சியின் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு உரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

கட்சித் தலைமையால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஜெயலலிதா பிறந்த நாளான 24.2.2020 அன்று ஆங்காங்கே அவரின் திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

இவ்வாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

கூட்டம் நடைபெறும் இடங்கள், பேசும் தலைவர்கள் பட்டியல்:

ஆர்.கே. நகர் சென்னை-. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சேலம் மாநகராட்சி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வேலூர் கிழக்கு - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி

கொளத்தூர் - அமைப்புச் செயலாளர் பொன்னையன்

தாம்பரம் நகரம் - தமிழ்மகன் உசேன் , மாநிலங்களவைக் குழு கொறடா விஜிலா சத்தியானந்த்

அம்பத்தூர் - கொள்கை பரப்புச் செயலாளர் மு. தம்பிதுரை

வத்தலக்குண்டு- அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், திருச்சி அரிகிருஷ்ணன்

சேப்பாக்கம்- அமைச்சர் செங்கோட்டையன்.

கோவை கவுண்டம்பாளையம் - அமைச்சர். எஸ்.பி.வேலுமணி.

சைதாப்பேட்டை - செம்மலை,

விழுப்புரம் நகரம்- அமைச்சர். சி.வி.சண்முகம்.

ஆலந்தூர்- பா. வளர்மதி.

அண்ணா நகர்- கோகுல இந்திரா.

பரமக்குடி- அன்வர்ராஜா.

உசிலம்பட்டி. அமைச்சர் ஆர்.பி.. உதயகுமார்.

இதேபோன்று மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x