Published : 19 Feb 2020 11:49 AM
Last Updated : 19 Feb 2020 11:49 AM

கீழடி: முதல் 3 கட்ட அகழாய்வுகளின் முடிவுகளை வெளியிடாதது ஏமாற்றம்; ராமதாஸ்

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 3 கட்ட அகழாய்வுகளின் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை 5 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்காக கீழடி அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று (பிப்.18) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக, ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு தமிழக அரசின் சார்பில் இன்று தொடங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்களின் கல்வி, கலை, கட்டுமான, கலாச்சாரப் பெருமைகளைப் பறைசாற்றும் புதிய ஆதாரங்கள் இந்த அகழாய்வில் கிடைக்கும்; தமிழர் நகர்ப்புற நாகரிக பெருமை உலகெங்கும் பரவும் என நம்புவோம்!

கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்கப்படும் நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட முதல் 3 கட்ட அகழாய்வுகளின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது. அவற்றை உடனடியாக வெளியிட்டு தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகுக்கு வெளிப்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

தவறவிடாதீர்!

ஹாட் லீக்ஸ்: ஓவராத்தான் போராரு ஓபிஆர்!

செம்மொழி வளர்ச்சி; 3 ஆண்டுகளில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.22 கோடி, சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்டது ரூ.643 கோடி: இதுதான் பாஜகவினர் தமிழ் பற்றா?- ஸ்டாலின் கேள்வி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x