

தேனி மாவட்டம், உத்தம பாளையத்தில் திருக்குணகிரி சமணர் மலை கண்காணிப்பு இன்றி உள்ளது. இதனால் இப் பகுதியை சமூக விரோதிகள் மது அருந்தும் திறந்தவெளி ‘பார்' ஆக பயன்படுத்துவதுடன், அரிய மகாவீரர் புடைப்புச் சிற்பங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சமணர்கள் மலைப் படுகைகளில் தங்கி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற் கொ ண்டனர். இவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் புடைப்புச் சிற்பங்களையும், வட்டெழுத்தில் பல்வேறு தகவல்களையும் கல் வெட்டுகளாகப் பொறித்துச் சென் றுள்ளனர்.
கழுகு மலை, மதுரை சமணர் மலை, யானை மலை, கீழவளவு, சித்தன்ன வாசல், எண்ணாயிரம், கும்பகோணம், திருவண்ணாமலை-சீயமங்கலம் உள்ளிட்ட பல் வேறு இடங்களிலும் சமணர் படுகைகளும், கல்வெட்டுகளும் அதிகம் காணப்படுகின்றன.
தேனி மாவட்டம், உத்தம பாளையம் - கோம்பை சாலை திருக்குணக்கிரி மலையில் சமணர் சின்னங்கள் அதிகம் உள்ளன. இந்த மலையின் பல இடங்களிலும் மூலிகை அரைக்க பயன்படுத்தப்பட்ட குழிகள், புடைப்புச் சிற்பங்கள், அணையா விளக்கு தூண், வட்டெழுத்து கல்வெட்டுகள், சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய தூண்கள், வற்றாத சுனை உள்ளி ட்டவை உள்ளன. தொல் லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் முறையான கண்காணிப்போ, பராமரிப்போ இல்லை.
இதனால் சமூக விரோதிகள் திறந்தவெளி பார் ஆகவும், சட்டவிரோத காரியங்களுக்கும் பயன்படுத்தும் அவலம் உள்ளது.
இது குறித்து தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சோ. பஞ்சுராஜா கூறியது: சமண மதம் கிமு 3-ம் நூற்றாண்டிலேயே தோன்றி விட்டது. 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் காலத்தில் இச்சமயம் மிகவும் புகழ்பெற்றது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திரு ஞானசம்பந்தர் பாண்டிய மன்னன் கூன்பாண்டியனுக்கு ஏற்பட்ட நோயை நீக்கி, சமண மதத்தில் இருந்து சைவ மதத்துக்கு மாற் றினார். இதனைத் தொடர்ந்து சமணர்களை கழுவேற்றம் செய் யும் நிலை ஏற்பட்டது. உத்தமபாளையம் திருக்குணக்கிரி மலை அக்காலத் தில் வெளிநாட்டு வணிகர்கள் தங்கும் இடமாக இருந்துள்ளது. இதன் தொன்மையைக் காக்கவும், பராமரிக்கவும் தொல்லியல் துறை கண்காணிப்பு ஊழியர்களை நியமிக்க வேண்டும். இந்த இடத் தை சுற்றுலாத் தலமாக மாற்றி புராத னத்தின் பெருமைகளை இளைய தலைமுறையினர் அறியச் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.