

பெண் காவலர்களை அவதூறாக சித்தரித்து டிக்-டாக் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் லால்குடி கீழ வீதி மகா மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி பிப்.16-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை பார்ப்பதற்கு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கச்சைக்கட்டி பகுதியைச் சேர்ந்த தம்பிராஜ் மகன் சுபாஷ் கண்ணன்(19) என்பவர் வந்திருந்தார். அவர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்த பெண் காவலர்களை வீடியோ எடுத்து அவதூறாக சித்தரித்து டிக்-டாக்கில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த பெண் காவலர், லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து சுபாஷ் கண் ணனை நேற்று கைது செய்தனர்.
இவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354 (டி) (பெண்களின் கண்ணியத்துக்கு குந்தகம் விளை வித்தல்), பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4, தகவல் தொழில் நுட்பச் சட்டம் 66 (சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.