நீதிமன்ற தடை;  திட்டமிட்டப்படி போராட்டம்: இஸ்லாமிய அமைப்பினர் அறிவிப்பு

நீதிமன்ற தடை;  திட்டமிட்டப்படி போராட்டம்: இஸ்லாமிய அமைப்பினர் அறிவிப்பு
Updated on
1 min read

நாளை நடத்தவிருந்த தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் போராட்டம் அமைதியான முறையில் கட்டாயம் நடக்கும் என இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி பிப்.19 சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்த நிலையில் உயர் நீதிமன்றம் போராட்டத்துக்கு தடை விதித்தது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைக்குறித்து இஸ்லாமிய இயக்கத்தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அவர்கள் கூறியதாவது:

“பிப்.19 திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும். பேரணி கலைவாணர் அரங்கம் அருகிலிருந்து புறப்படும். தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சித்தலைவர்களும், முன்னாள், இந்நாள் சட்டமன்ற, மக்களை உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்துக்கொள்வார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் தவிர ஏனைய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடைபெறும்.

போராட்டம் அமைதியாக தேசியக்கொடியைக் கையில் ஏந்தி நடைபெறும். திட்டமிட்டபடி நாளை சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்பதால் நீதிமன்றம் விதித்த தடை எங்களுக்குப் பொருந்தாது”

இவ்வாறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in