Published : 18 Feb 2020 03:25 PM
Last Updated : 18 Feb 2020 03:25 PM

பஞ்சமி நிலத்தில் இல்லை என்பதை முரசொலி அறக்கட்டளை நிரூபிக்க வேண்டும்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக பெறப்பட்ட புகாரை விசாரிக்க தங்களுக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (The National Commission for Scheduled Castes-NCSC) தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிலம் பஞ்சமி நிலம் என்ற விவகாரம் சிறிது காலமாக சர்ச்சையாகி வருகிறது.

இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் அளித்த எதிர் மனுவில் தங்கள் விசாரணை குறிப்பாக அது பஞ்சமி நிலமா அல்லது இல்லையா என்பதைப் பற்றியே என்று தெரிவித்துள்ளார்.

“மனுதாரர் குற்றமற்றவர் என்றால், சர்ச்சைக்குரிய நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்றால் அவர்கள் உலகம் அறிய அதனை உரிய ஆவணங்களுடன் அறிவிக்கலாம். ஆனால் மனுதாரர் தேவையற்ற புகார்களை எதிர்மனுதாரர் மீது சுமத்துகிறார்” என்று அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தாழ்த்தப்பட்டோருக்கான பஞ்சமி நிலம் ‘மோசடி செய்து’ பறிக்கப்பட்டதா என்பதை அறிவது ஆணையத்தின் கடமையாகும் மேலும் முரசொலி அறக்கட்டளை துணைத் தலைவர் (முருகன்) மீது சேற்றை வாரி இறைக்கும் வேலையைச் செய்து வருவதாகவும் ஆணையத்தரப்பிலான எதிர்மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் காரணங்களினால் புகார் எழுப்பப் படுவதாக அவர்கள் கருதினாலும் இந்த விவகாரத்தில் தாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிப்பதில் எந்தத் தடையும் இல்லை, என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட் பஞ்சமி நிலம், அறக்கட்டளையினால் அபகரிக்கப்பட்டது என்று பாஜகவின் ஆர்.ஸ்ரீநிவாசன் எனப்வர் புகார் அளித்திருந்தார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு சொத்து யாருக்கு உடைமையானது என்பதை விசாரிக்க அனுமதியில்லை, இருப்பினும் அது பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறுதியிடும் உரிமை இருப்பதாகவே இந்த எதிர்மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆணையத்தின் துணைத்தலைவர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாக முரசொலி ட்ரஸ்ட் குற்றம் சாட்டியது, அதாவது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் பொறுப்பேற்ற பிறகும் கூட பாஜகவுடான தன் உறவிலிருந்து விடுபடவில்லை என்று முரசொலி அறக்கட்டளை குற்றம்சாட்டியது.

முதலில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் இந்த விவகாரத்தில் பிரதிநிதித்துவம் செய்ய வைக்கப்பட்டார், இப்போது முரசொலி அறக்கட்டளை, ஆணையத்தின் செயலர் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று திருத்தம் கோரியுள்ளது. ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து ஆணையத்தை அதன் செயலர் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது என்றார். மேலும் சொலிசிட்டர் ஜெனரல் இந்தத் திருத்தத்துக்கு எதிராக தனியே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை மார்ச் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

புகார்தாரரின் வழக்கறிஞர் எஸ்.ரவி கூறும்போது, முரசொலி அறக்கட்டளை தங்கள் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்று அடித்துக் கூறுகின்றனர், ஆனால் அதே வேளையில் தாங்கள் அங்கு வாடகைக்குத்தான் இருக்கிறோம் என்கின்றனர் என்று முரசொலி அறக்கட்டளை மீது குற்றம்சாட்ட, நீதிபதி இந்த வாதங்களையெல்லாம் இறுதி விசாரணையில் மேற்கொள்ளலாம் என்று விசாரணையை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x