சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 12 குடும்பத்தினரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் - மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் விபரீதம்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 12 குடும்பத்தினரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் - மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் விபரீதம்
Updated on
1 min read

வில்லிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பிடித்ததால் வெளியே வர முடியாமல் தவித்த 12 குடும்பத்தினரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

சென்னை புதிய ஆவடி சாலை வில்லிவாக்கம் நாதமுனி பேருந்து நிறுத்தம் அருகே ‘ஜெயம் சக்தி’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மொத்தம் 12 குடும்பத்தினர் வசித்து வருகிறார் கள். தரை தளத்தில் குடியிருப்பின் மாடிப்படி வாசல் அருகிலேயே ஒவ்வொரு வீட்டுக்குமான மின்சார மீட்டர் பெட்டியும், அதன் அருகிலேயே லிப்ட்டும் உள்ளது.

நேற்று காலை 11 மணியளவில் திடீரென மின்சார பெட்டிகள் பயங் கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. சில நிமிடங்களில் அருகில் இருந்த லிப்ட்டிலும் தீ பரவியது. இதனால் ஏற்பட்ட புகை 12 குடியிருப்புகளுக்கும், அங்கிருந்த கடைகளுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்தவர்கள் மூச்சுத் திண றல் மற்றும் கண் எரிச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வீட்டில் இருந்து வெளியேற முயற்சி செய்தவர்கள் லிப்ட்டும் தீயில் எரிவதை பார்த்து, மாடிப்படி வழியாக இறங்க முயற்சி செய் தனர். ஆனால் மாடிப்படி வாசல் அருகிலேயே மின்சார இணைப்பு பெட்டிகள் எரிந்து கொண்டிருந்த தால் அவர்களால் படி வழியாகவும் வெளியேற முடியவில்லை.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் கீழ்ப் பாக்கம், வில்லிவாக்கம், ஜெ.ஜெ.நகர், அம்பத்தூர், வேப்பேரி ஆகிய பகுதிகளில் இருந்து 6 வாகனங்களில் 25 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட் டனர். மின் இணைப்பை துண் டித்து நுரை மூலம் தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் மற்ற வீரர்கள் வீடுகளுக்குள் சிக்கி இருந்த வர்களை ஏணி மூலமாகவும், கயிறு கட்டியும் கீழே இறங்கி வரச்செய்து காப்பாற்றினர். ஜன்னல் வழியா கவும் சிலரை மீட்டனர்.

தீ எரிந்து கொண்டிருந்த நிலையில் வெளியே வர முயற்சி செய்த ரமேஷ், மனைவி சுகுணா, இவர்களின் இரண்டரை வயது மகள் தீப்தி ஆகியோருக்கு தீக் காயம் ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். வில்லிவாக்கம் காவல் துறை ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அதிக மின் அழுத்தமே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in