Published : 18 Feb 2020 10:03 AM
Last Updated : 18 Feb 2020 10:03 AM

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே சாலையில் கிடந்த முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த போலீஸார்

புதுச்சேரியில் சாலையில் கிடந்த முதியவரை போலீஸார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள முல்லைநகர் குடிசை மாற்று வாரியம் அலுவலகம் அருகே நேற்று முன்தினம் 75 வயது முதியவர் சாலையில் கிடந்தார். அப்பகுதியில் சென்றோர் உருளையன்பேட்டை போலீஸாருக்கு தகவல் தந்தனர். போலீஸ்காரர்கள் மோகன், அண்ணாதுரை அங்கு வந்தனர். போலீஸார் விசாரணையில் காரில் வந்தவர்கள் முதியோரை அங்கு இறக்கி விட்டது தெரிய வந்துள்ளது.

அவருக்கு முதலுதவி தந்தனர். பிறகு உணவு, தண்ணீர் தந்தனர். அவரால் சாப்பிட முடியாத நிலை இருந்தது. போலீஸ்காரர் மோகன் அவருக்கு உணவை ஊட்டி விட்டார். அவரது சொந்த ஊர் வேலூர் என்பது தெரியவந்தது. பெயர் இதர விவரங்களை சொல்லும் நிலையில் அவர் இல்லை. இதையடுத்து முதியோர் காப்பகத்தில் அவரை சேர்த்தனர்.

இது தொடர்பான படத்தை துணைநிலை ஆளு நர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கூறியதாவது:

புதுச்சேரியில் பீட் போலீஸார் திறம்பட செயல் படுகிறார்கள். மனிதாபிமானத்துடன் செயல்பட்டு உதவுகின்றனர். குற்றவாளிகளை கண்காணிப்பதால் தொடர் குற்றத்தில் ஈடுபடுவதும் தற்போது தடுக்கப் படுகிறது.

பழைய குற்றவாளிகள் தந்த உத்தரவாதம் பரிசீலிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தகவல் தரப்படுகிறது. புதுச்சேரி பீட் போலீஸ் முறையை கேட்டறிந்த மத்திய அரசானது இதர யூனியன் பிரதேசங்களிலும் பீட் போலீஸ் முறையை அமல்படுத்த அறிவுறுத் தியுள்ளது என்று தெரிவித்தார். காரில் வந்தவர்கள் முதியோரை அங்கு இறக்கி விட்டது தெரிய வந்துள்ளது. பெயர் இதர விவரங்களை சொல்லும் நிலையில் அவர் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x