

கோலாலம்பூரில் இருந்து சென் னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறி முதல் செய்யப்பட்டது. இதுதொடர் பாக 2 பேர் கைது செய்யப் பட்டனர்.
மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முருகேஷ் (32) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்ததில் அவர் அணிந் திருந்த ஷூக்களின் அடிப்பகுதியில் 1 கிலோ தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், முருகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.40 மணிக்கு மற்றொரு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த மணிதேவன் (33) என் பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் ஆசனவாயில் 1 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.